பெங்களூரில் இன்ஜினியர்கள் சிலர் இணைந்து சைக்கிள் மிக்ஸியை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
பெங்களூர்:
கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் விளைவால் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் பலர் சுயமாக தொழில் தொடங்கி அசத்தியும் வருகின்றனர்.அதேபோல், கொரோனா காலத்தில் வீட்டிலேயே முடங்கி இருந்த போது, இன்ஜினியர்கள் சிலர் இணைந்து சிந்தித்து சைக்கிள் மிக்ஸி வடிவமைத்துள்ளனர்.
Read more – ஆப்கானிஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : 12 ராணுவ வீரர்களை கொன்ற 2 சக வீரர்கள்
பெங்களுரூவில் உள்ள ஜூஸ் கடை ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்ஜினியர்கள் சிலர் இணைந்து பழைய சைக்கிள் மற்றும் பழைய மிக்ஸியை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு ஜூஸ் பரிமாறி வருகின்றனர்.
வாடிக்கையாளர்களே இந்த சைக்கிளை மிதித்து ஜூஸ் ரெடி செய்ய அனுமதிக்கப்படுவதால் விரும்பி இந்த கடைக்கு வந்து செல்கின்றனர். இதனால் அவர்களது ஆரோக்கியம், ஆர்வம் மேலோங்குகிறது. மேலும் இந்த கடையில் வீணாகும் எந்த பொருட்களையும், மறுசுழற்சி மூலம் அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்தியும் வருகின்றனர்.