காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் பாடமலோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, அதிகாலை 2.30 மணி முதல் அந்த பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனை காஷ்மீர் மண்டல போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடைய, இந்த துப்பாக்கிச் சண்டையின் போது, அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண் உயிரிழந்ததாகவும், 2 பாதுகாப்பு படையினர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.