Hybrid முறையில் உச்ச நீதிமன்றம் சரியாக இயங்கவில்லை எனவே வழக்கமான விசாரணை விரைவில் தொடங்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
டெல்லி, வழக்கமான நீதிமன்ற விசாரணை நடைபெறுவது என்பது மனிதர்களின் அடிப்படை உரிமை என அறிவிக்கக்கோரி பொது நல அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காணொளி காட்சி மற்றும் வழக்கமான விசாரணை முறை என இரண்டும் இணைந்த hybrid முறை என்பது தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இது சரியாக வேலை செய்யவில்லை! இவ்வாறு நீதிமன்றத்தில் உட்கார்ந்துகொண்டு திறையைப் பார்ப்பது என்பது எங்களுக்கு சந்தோஷமானதாக இல்லை; வழக்கமான விசாரணை முறை முழுமையாக வர வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம். நீதிமன்றங்கள் பொதுமக்கள் உள்பட அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விரும்புகிறோம்.
மேலும், இரண்டு மாதங்களாக பல்வேறு நெறிமுறைகளை வழங்கியும் வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்திற்கு நேரில் வருவதற்கு தயாராக இல்லை. அவர்கள் அவர்களது அலுவலகங்களிலிருந்து வாதங்களை வைப்பதையே சுலபமானதாக கருதுகிறார்கள், ஆனால் இது தொடர்கதையாக இருந்து விடக்கூடாது நீதிமன்றத்தை முழுமையாக பயன்படுத்துவதற்கான பொது மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
எனவே மனுதாரர்கள் இது தொடர்பான தங்களது பரிந்துரைகளையும் கோரிக்கைகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நான்கு வாரத்திற்கு பிறகு விசாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் எனவும் நீதிபதிகள் கூறினர்.