மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி.
இன்னும் ஒருசில மாதங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான பிரச்சாரங்களை அந்தந்த மாநிலங்களில் போட்டியிடும் கட்சிகள் தீவிரமாக தொடங்கிவிட்டன. அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது மேற்கு வங்க மாநிலம். இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். நந்திகிராம் தொகுதி ஏற்கெனவே திரிணாமுல் காங்கிரஸ் வசம் இருந்த தொகுதி ஆகும். சூழலை பொறுத்து பவானிப்பூர் தொகுதியிலும் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்பேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மம்தா.