சீன செயலியான டிக் டாக் நிறுவனம் மத்திய அரசின் உத்தரவின் பெயரில் இந்தியாவில் உள்ள கிளையை மூடியதால் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
புதுடெல்லி :
பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தும் விதமாக இருந்ததாகக் கூறி டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட ஏராளமான சீன செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் தொடர்ந்து 5 மாத காலமாக தடை தொடர்ந்து நீடித்து வருவதால் டிக்டாக் நிறுவனம் தனது இந்திய ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியதாவது:
Read more – மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற பேரணி ரத்து : விவசாய சங்கங்கள் அறிவிப்பு
இந்தியாவில் மீண்டும் டிக்டாக் பயன்பாட்டுக்கு வரும் என தாங்கள் நம்புவதாகவும், ஆனால் அதற்கான கால அளவீடு தெரியாததால் இந்தியாவில் செயல்படும் கிளையை தற்காலிகமாக மூடுவதாகவும் அறிவித்துள்ளது. திடீரென அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால், இந்தியாவில் உள்ள கிளையை மூடியதால் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.