சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் திரைப்பட, நடிகை தமன்னா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்திருந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனே பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சென்னைகல்லூரி மாணவர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இது போன்ற ஆன்லைன் போராட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் சூரிய பிரகாசம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அந்த மனுவில் அவர் இளைஞர்களை மயக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள இது போன்ற ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர் .இதில் ஈடுபட்ட விளையாடும் பல இளைஞர்கள் பல்வேறு விதமான காரணங்களால் தற்கொலைகளுக்கு ஆளாகின்றனர். எனவே, இதுபோன்ற சூதாட்ட வேடங்களில் நடித்திருக்கும் விராட் கோலி மற்றும் தமன்னா மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், மற்றும்ஆர்.ஹேமலதா ஆகியோர் இடத்தில் விசாரணைக்கு வந்தது அப்பொழுது அவர்கள் மூன்று வார காலத்துக்குள் மத்திய மாநில அரசுகள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.




