வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாததைக் கண்டித்து மாநிலங்களவையிலிருந்து தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
பிரதமர் தனது உரையின்போது வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடாததை கண்டித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பிரதமரின் செயல் விவசாயிகளுக்கு எதிரானது எனக் கூறி காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியினர் வெளியேறினர். பிரதமரின் உரை முடிந்தவுடன் இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 170 க்கும் மேற்பட்ட உயிரிழந்திருக்கிறார்கள். விவசாயிகள் உயிரைவிட சட்டத்தை பெரிதாகக் கருதி பிரதமர் கருதி அதனை திரும்பப் பெற மறுப்பதாக கூறி திருச்சி சிவா வெளிநடப்பு செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.