எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய செயலுக்கு, இந்திய ராணுவமும் தக்க பதிலடிக் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின்,பூஞ்ச் மாவட்டத்தில், பாலகோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் பலியாகினார். பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா? என்பதுக் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.




