வேளாண் மசோதாக்கள் கொண்டுவரப்பட்டதற்கு முக்கிய காரணமே விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்கு தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு மாநாட்டு துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வேளாண் மசோதாக்களை பற்றி பேசியதாவது;விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய சட்டங்கள் மூலம் கூடுதல் சந்தை வசதிகளை பெற வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பான, எளிய பண பரிவர்த்தனைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
Read more – அமெரிக்காவில் 24 மணி நேரத்திற்குள் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படும் : அதிபர் டிரம்ப் தகவல்
மேலும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை டிஜிட்டல் தளங்கள் வாயிலாகவும் விற்கலாம். விவசாயிகள் இப்போது தாங்கள் விளைவித்த விளைபொருட்களை விவசாய மண்டிகளிலும், வெளியேயும் விற்கலாம்.விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களை வளமானவர்களாக மாற்றுவதற்கான முயற்சிக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.