தமிழகத்திற்கு பிப்ரவரி 14 ஆம் தேதி வரும் பிரதமர் நரேந்திர மோடி மூன்று மணி நேரம் மட்டுமே சென்னையில் இருப்பார் என தகவல் கிடைத்துள்ளது.
சென்னை :
தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த 19 ம் தேதி மோடியை சந்தித்து பேசினார். அதன்பிறகு தமிழகம் வர ஒப்புக்கொண்ட மோடி பிப்ரவரி 11 ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஒரு விழாவில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி,அதில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். மேலும் பிரதமர் மோடி அன்றைய நாளில் 3 மணி நேரம் மட்டுமே சென்னையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more – மீண்டும் வருவேன் முதல்வராக.. மக்களின் ஆதரவோடு.. திருப்பூரில் முதல்வர் பழனிசாமி பேச்சு
அதன்படி, பிப்ரவரி 14 ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மோடி காலை 7.50 மணிக்கு புறப்பட்டு 10:35 மணிக்கு சென்னை வந்தடைகிறார். அதன் பிறகு 11.15 மணிக்கு நேரு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மீண்டும் மூன்று மணி நேர சென்னை பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி மதியம் 1.35 மணிக்கு கொச்சி செல்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.