புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது.இதில் பங்கேற்ற, என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் மற்றும் 2 சபை காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்றைய தினம் முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, உள்ளிட்ட 126 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. மேலும் பரிசோதனை செய்யப்பட்ட 126 நபர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது