சென்னை ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 6,993 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் முன்கள பணியாளர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கோவை, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்