உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் என ராகுல்காந்தி டுவீட்.

உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் என ராகுல்காந்தி டுவீட்.
ஹேத்ராஸில் இளம்பெண் பாலியன் வன்கொடுமை செய்யப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டதை அடுத்து, அப்பெண்ணிக் குடும்பத்தினரை பார்க்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் அவரது தங்கையுமான பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர்.
அப்போது போலீசார் அவரைச் செல்லவிடாமல் தடுத்து கீழே தள்ளினர். இதில் அவர் காயம் அடைந்தார். இந்தச் செய்தி மீடியாக்கள் பரவவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின் நேற்று மாலை அம்மாநில காவல்துறை நோய்த்தடுப்பு சட்டத்தின் கீழ் ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறினார்.
இந்நிலையில் நேற்றைக்கு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தைப் பார்க்கச்சென்றதாக ராகுல்காந்தி, பிரியாகாந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் 200 பேர் மீது உ.பி., போலிஸாரால் வ3 பிரிவுகளின் கிழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன். யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன். உண்மையின் துணையால் பொய்யை வெல்வேன். பொய்யை எதிர்க்கும் துன்பத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.




