அஸ்ஸாமில் ஓடும் ரயிலில் ஆயிரத்திற்கு அதிகமான துப்பாக்கி குண்டுகளை ரயில்வே போலீசார் கண்டுபிடித்தனர்.
அஸ்ஸாம் :
அஸ்ஸாமை அடுத்த பொங்கைகயான் என்ற இடத்தில் ஓடும் நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் வழக்கம் போல் ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடத்திய சோதனையில் ஒரு பைக்குள் அளவுக்கு அதிகமான சிறு சிறு பெட்டிகள் நிறைய இருப்பதை கண்டறினர்.
அப்பொழுது அந்த பெட்டிகளை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் திறந்து பார்த்தபோது அதிந்து விட்டனர். அந்த பெட்டிக்குள் பயன்படுத்தும் நிலையில் ஆயிரத்திற்கு அதிகமான துப்பாக்கி குண்டுகள் இருந்துள்ளது. இதனையடுத்து அஸ்ஸாம் ரயில்வே போலீசார் இந்த துப்பாக்கி குண்டுகளை யார் கொண்டு வந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more – மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் மேலும் உயர்வு : சுப்பிரமணியன் சாமியின் நக்கல் ட்வீட்
மேலும், இந்த பையை கொண்டுவந்த நபர் எந்த ரயில் நிலையத்தில் ஏறினார் என்பது குறித்தும், யார் அந்த நபர் என்பது குறித்தும் சிசிடிவி மூலம் ஆய்வு செய்து வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.