கொரோனா கால முன்னச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட காலத்தில் முதன்முதலில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன எனினும் புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் கருதி அந்தந்த மாநில அரசு தங்கள் மாநிலத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலார்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
ஜூலை மாதம் முதல் அறிவிக்கப்பட்டு வரும் தளர்வுகளில் நான்காம் கட்ட தளர்வாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது பண்டிகை கலங்களையொட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்களைப்பற்றி ரயில்வே வாரியத் தலைவர் வி கே யாதவ் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:
பண்டிகை காலத்தையொட்டி, அக்டோபர் 15-ந் தேதியில் இருந்து நவம்பர் 30-ந் தேதிவரை கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். அனைத்து ரெயில்வே கோட்ட பொது மேலாளர்களையும் அழைத்து பேசியுள்ளோம்.
உள்ளூர் நிர்வாகத்துடன் பேசி, கொரோனா நிலவரத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு அவர்களிடம் கூறியுள்ளோம். அவர்கள் அறிக்கை அளித்த பிறகு, எத்தனை சிறப்பு ரெயில்களை இயக்குவது என்று முடிவு செய்வோம். தற்போதைக்கு மேலும் 200 சிறப்பு ரெயில்களை இயக்குவது என்று மதிப்பிட்டுள்ளோம். இது, வெறும் மதிப்பீடுதான். இந்த எண்ணிக்கை உயரக்கூடும். காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ள வழித்தடங்களில் கூடுதல் ரெயில்களை இயக்குவோம்.