
நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ அனைத்து விதமான கடன் வழங்குவதற்கான எம்.சி.எல்.ஆர் எனப்படும் இறுதிநிலைச் செலவு விகிதத்தை 0.1 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
இதையடுத்து எஸ்.பி.ஐ வங்கியில் கடன் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் செலுத்தி வரும் இ.எம்.ஐ கட்டணம் இனிவரும் மாதங்களில் உயரக்கூடும். இதையடுத்து அனைத்து பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் இதே நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது எம்.சி.எல்.ஆர் அடிப்படையில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இ.எம்.ஐ கட்டணம் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற பெஞ்ச்மார்க் அடிப்படையில் வாங்கியவர்களுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.