தமிழ் மொழியை மத்தியத் தொல்லியல் பட்டயப் படிப்புக்காக தகுதிப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே தோன்றிய பெருமை கொண்ட மொழி நம் தமிழ் மொழியின் பெருமைகளை கூற எத்தனையோ புலவர்களும், கவிஞர்களும், எழுத்தாளர்களுக்கும் தமிழ்கத்தில் பிறந்துள்ளனர்.
தமிழின் பெருமைகளைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் மேடைகளில் பேசு கௌரவித்திருக்கிறார்.
இந்நிலையில் செம்மொழியான தமிழ் மொழியை மத்தியத் தொல்லியல் பட்டயப் படிப்புக்காக தகுதிப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாகப் பல அறிறிஞர்கள், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் விமர்சனம் தெரிவித்த நிலையில் மத்திய அரசு தமிழ் மொழியை மத்தியத் தொல்லியல் பட்டயப் படிப்புக்காக தகுதிப்பட்டியலில் சேர்த்துள்ளது.
இதனால் தமிழர்களும், தமிழ் நேசர்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இத்தனை அரசியல் பரபரப்புகளுக்கு இடையே நேற்று முதல்வர் பழனிசாமி தமிழ்மொழியை தொல்லியல் பட்டயப் படிப்புக்காகத் தகுதிப்பட்டியலில் சேர்க்கபட்டுள்ளது.