பிரதமரின் வெளிநாட்டு பயண விவரங்கள் குறித்து வெளியிட இடைக்கால தடை விதித்து டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி:
கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு வரை பிரதமர் மோடி அமெரிக்கா,சீனா போன்ற நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தார்.மேலும் 2013 ம் ஆண்டு தொடங்கி பிரதமர் மன்மோகன்சிங்,அதனை தொடர்ந்து பிரதமரான நரேந்திர மோடி வரை விமானப்படை விமானத்தில் இதுவரை மேற்கொண்ட பயண விவரங்களை அளிக்குமாறு கடந்த 2018 ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் விண்ணப்பித்தார்.அதன்படி, இந்த விவரங்களை அளிக்கும்படி விமானப்படைக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து இந்திய விமானப்படை தலைமையகம் சார்பில் டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.நேற்று நீதிபதி நவீன் சாவ்லா கீழ் நேற்று விசாரணைக்கு வந்தது.விமானப்படையின் தரப்பில் ‘மத்திய தகவல் ஆணையம் கேட்டுள்ள விவரங்களை வழங்க முடியாது, இவை அனைத்தும் பிரதமர் மற்றும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இயங்காது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இவை அனைத்தையும் விசாரித்த நீதிபதி,பிரதமரின் வெளிநாட்டு பயண விவரங்களை தகவல் உரிமை சட்டத்தின்கீழ் இந்திய விமானப் படை வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.மேலும் இந்த வழக்கானது ஏப்ரல் 12 ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.




