நாடுமுழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வீட்டின் உட்புறத்திலும் முகக்கவசம் அணிய நேரம் வந்துவிட்டது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் இந்த கொடூர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற முக்கிய காரணங்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர், நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் வேகம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மாதவிடாய் காலத்திலும் பெண்கள் தாராளமாக இந்த தடுப்பூசியினை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
Read more – மத்திய அரசை தொடர்ந்து தொழிலதிபர்களிடம் மன்றாடும் அரவிந்த் கெஜ்ரிவால்…
மேலும், கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அச்சப்பட்டு மருத்துவமனைகளில் படுக்கைகளை ஆக்கிரமித்து வருகின்றனர் என்றும், மருத்துவமனைகளில் மருத்துவர்கள் ஆலோசனை பெற்ற பிறகே அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், முகக்கவசம் சரிவர பயன்படுத்தாவிட்டால் நாளொன்றுக்கு 30 நபர்களில் இருந்து 406 பேருக்கு பரவினால் வீட்டின் உட்புறத்திலும் முகக்கவசம் அணிய நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.