உத்தரகாண்டில் நேற்று ஏற்பட்ட பனி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி இரண்டாவது நாளாக தொடர்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் நேற்று காலை ஏற்பட்ட பனிச்சரிவால் தெளளிகங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ரிஷிகங்கா தபோவன் நீர்மின் நிலையம் கடுமையாக சேதம் அடைந்தது. பனி வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்பதால் ஆற்றங்கரையோரம் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போனவர்கள் தேடடப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மீட்பு பணிகளும் துரித்தப்படுத்தப்பட்டது. எல்லை பாதுக்கப்படி வீரர்கள், இந்தோ – திபெத் எல்லை பாதுக்கப்பபுபடை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழு , மாநில பேரிடர் மீட்பு குழு , இந்திய ராணுவம் , இந்திய விமானப்படை என பல குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரம் இருக்கக்கூடிய மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளை மாநில அரசு ஈடுபட்டிருக்கிறது..மேலும், உத்தரகாண்ட் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு சார்பில் முழுமையாக வழங்கப்படும் எனவும் தொடர்ச்சியாக மாநிலத்தின் சூழல் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நிவாரணம் மற்றும் மீட்பணிக்கு 1070 மற்றும் 9557444486 என்ற கட்டனமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.