ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் மருந்துகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான கொரோன தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், ஒடிசா, பஞ்சாப், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவலும் அவ்வப்போது கிடைத்து வருகிறது. இந்தநிலையில், ஜெய்பூர் சாஸ்திரி நகரில் உள்ள கன்வட்டியா அரசு மருத்துவமனையிலிருந்து 320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் மருந்துகள் திருடப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read more – 48 மணி நேரத்தில் 1000 நபர்களை தாக்கிய கொரோனா.. இருந்தும் தொடர்கிறது ஹரித்வார் கும்பமேளா..
மேலும், இதுகுறித்து அந்த பகுதி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த திருட்டானது திங்கட்கிழமை நடந்ததா அல்லது செவ்வாய் இரவா என்பது குறித்த தகவலுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. மருத்துவமனை நிர்வாகத்தை சார்ந்த யாரும் இதை திருடியுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.