பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவிய ஒருவர் ஜம்முவில் கைது.
டெல்லி, சமீப நாட்களாக ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து கொண்டே வருகிறது; எல்.சி பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் வெடிபொருள் கடத்துவதும், எல்லையை மீறி இந்திய எல்லைக்குள் ரகசியமாக தீவிரவாதிகள் உடுருவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்தவாரம் ஜம்முவில் அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர். இதனையடுத்து பயங்கரவாத தடுப்பு குழு ஜம்முவில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஜம்முவில் உள்ள காந்தி நகர் பகுதியில் தேடுதல் வேட்டையின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவின் சில இடங்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பாகிஸ்தான் அமைப்புகளின் செயல் அமைப்பாளர் “Handler”-லரிடம் பகிர்ந்து உள்ளதாக ஜம்மு போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவரா? ஏதற்காக புகைப்படங்களை அனுப்பினார்? இந்தியாவில் சதி திட்டம் தீட்டுகிறார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.