என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஜே.இ.இ முதன்மை தேர்வுகள் அடுத்த ஆண்டில் இருந்து 4 முறை நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஜே.இ.இ முதன்மை தேர்வுகள் அடுத்த ஆண்டில் இருந்து 4 முறை நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.இதன் முதற்கட்டமாக ஜே.இ.இ. முதன்மை தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 23 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை நடைபெறுகிறது.
Read more – பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கம்: அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் அதிபர் ஒப்புதல்
அதனைத்தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அடுத்தடுத்த தேர்வுகள் நடைபெறும் என்றும்,பிப்ரவரி மாதம் நடைபெறுகின்ற ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கான முடிவுகள் கடைசி தேர்வு முடிந்த அடுத்த 5 நாட்களில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.