மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய அரசு பிரதிநிதிகளான நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டம் குறித்து விவசாயிகளுடன் மத்திய அரசு நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தியது.இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோரும், 35 க்கு மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அன்று நடந்த அந்த பேச்சவார்த்தையில் எந்த ஒரு தீர்க்கமாக எட்டப்படவில்லை.தொடர்ந்து போராட்டம் வலுப்பெற தொடங்கியது.இந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 2-ம் சுற்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
எனவே இன்று நடக்கும் இந்த பேச்சவார்த்தையை முன்னிட்டு நேற்று மத்திய அரசு பிரதிநிதிகளான நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோருடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.ஆலோசனை கூட்டமானது வேளாண் மசோதாக்களை பற்றிய விவசாயிகளின் கவலைகள் மற்றும் அதை தெளிவுப்படுத்தவும் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தாக தெரியவந்துள்ளது.