ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் கப்பலில் வரும் பொருட்களை இறக்க, தரை தளத்தில் 60 அடியில் ராட்சத கிரேன் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று பிற்பகல் எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் கவிழ்ந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சுமார் 15 ஊழியர்கள் கிரேனுக்கு அடியில் சிக்கினர். தகவல் அறிந்து வந்த தியணைப்புத் துறையினர், கிரேனுக்கு அடியில் சிக்கிய 11 பேரை இறந்த நிலையில் மீட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது .
படுகாயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு விசாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்திற்கு, முதலமைச்சர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார்.