தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட 150 வார்டுகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
ஹைதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட 150 வார்டுகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.இந்த தேர்தலில் பெரும் வெற்றி மூலம் ஹைதராபாத் மாநகராட்சி மேயர் மற்றும் உறுப்பினர் பதவியை அடையும் நோக்கில் பாஜக,காங்கிரஸ்,தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி,அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் போன்ற கட்சிகளின் இடையே கடும் போட்டிகள் நிலவி வருகிறது.
1,122 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் 150 வார்டுகளை கொண்ட ஹைதராபாத் மாநகராட்சியில் 74.67 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க 9,101 வாக்குச்சாவடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் முடிவானது வரும் டிசம்பர் 4 ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.