வங்காளத்தை தங்கம் போன்று மாற்றுகிறோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:
மேற்குவங்காளத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறயுள்ள நிலையில்,தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரசும்,மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக மேற்குவங்காளத்திற்கு சென்றுள்ளார். பாஜக தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
Read more – கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் : தொலைகாட்சி நேரலையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
இந்நிலையில், அம்மாநிலத்தின் போல்பூர் பகுதியில் அமித்ஷா இன்று தேர்தல் தொடர்பாக பேரணியில் பங்கேற்றார். அந்த பேரணியில் அமித்ஷா பேசியதாவது:-
நரேந்திரமோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். வங்காளத்தை ஐந்து ஆண்டுகளில் தங்கம் போன்று மாற்றுகிறோம். மேற்குவங்காள மக்கள் மம்தா பானர்ஜி மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர் என்பதை இந்த பேரணி காட்டுகிறது.
பிரதமர் நரேந்திரமோடி மீதான மேற்குவங்காள மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் இந்த பேரணி வெளிப்படுத்தியுள்ளது.