இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) வேலை செய்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி பல பதவியிடங்களுக்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்: தரவு ஆய்வாளர், கணக்கு நிபுணர் உட்பட மொத்தம் 39 பதவிகளுக்கு ஆட்கள் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.
கல்வி தகுதி:
ரிசர்வ் வங்கியின் ஆட்சேர்ப்புக்கான வேட்பாளர்களின் கல்வித் தகுதிகள் பதவிகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. தற்போதைய காலியிடங்களுக்கு CA, B.Tech, BE மற்றும் M.Tech வேட்பாளர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி பற்றிய கூடுதல் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுககலாம்.
வயது வரம்பு:
ரிசர்வ் வங்கியின் பல்வேறு பதவிகளில் வெளிவந்த இந்த காலியிடத்திற்கான வயது வரம்பும் வித்தியாசமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகள் மற்றும் பதவிகளின் படி அதிகபட்ச வயது 40 ஆண்டுகள்.
விண்ணப்பிக்கும் நாள்:
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி: 03 ஆகஸ்ட் 2020. ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி, 22 ஆகஸ்ட் 2020 (மாலை 06:00).
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான rbi.org.in-யை பார்வையிட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ரிசர்வ் வங்கியில் இந்த பதவிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது நேர்காணல் மற்றும் ஷார்ட் லிஸ்ட் அடிப்படையில் செய்யப்படும். மேலும், தகவலுக்கு, இங்கே கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் காணலாம்.




