அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை 19.12.2020-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
மொத்தப் பணியிடங்கள் : 10
நிறுவனம் : தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation Limited (TAHDCO))
பணியிடம் : சென்னை
பதவி மற்றும் காலியிடங்கள்:
- அசிஸ்டெண்ட் இன்ஜினியர் (Assistant Engineer) – 10
சம்பளம் : மாதம் ரூ.36,400 – 1,15,700
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.12.2020
வயது வரம்பு : SC,SC(A),ST,MBC/DNC,BC(O), BC(M) குறைந்தபட்சம் 18 ஆகவும், அதிகபட்ச வயது 59 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினருக்கு குறைந்தபட்சம் 18 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு
கல்வித் தகுதி : சிவில் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது சிவில் மற்றும் கட்டமைப்பு பொறியியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tahdco.com அல்லது https://tahdco.onlineregistrationform.org/TAHDCO/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://tahdco.onlineregistrationform.org/TAHDCODOC/Notification.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!