டெஸ்ட், டி20 போட்டியே போதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இனி தேவையில்லை என பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: ஒரு நாள் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்றால் மைதானம் நிரம்பியிருக்கும். ஆனால் இந்தியா, பாகிஸ்தான், முக்கியமாக இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ள மைதானங்கள் ரசிகர்களால் நிரம்பாது. ஒரு நாள் ஆட்டத்தை நடத்த வேண்டும் என்பதற்காக நடத்துகிறார்கள்.
ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதல் 10 ஓவர்களுக்கு அதிரடியாக விளையாடுகிறார்கள். பிறகு 40 ஓவர்கள் வரை ஒரு பந்துக்கு ஒரு ரன், அவ்வப்போது சில பவுண்டரிகள் என 200 ரன்கள் எடுக்கின்றனர். கடைசி 10 ஓவர்களுக்கு மீண்டும் அதிரடியாக விளையாடுகிறார்கள். தொலைக்காட்சி வர்ணனையாளராக பார்க்கும்போது சற்று இழுவையாக உள்ளது.வீரர்களுக்கு அதில் விளையாடுவது சிரமம். லீக் கிரிக்கெட்டில் நிறைய பணம் புரள்கிறது.ஒரு நாள் கிரிக்கெட் செத்துக்கொண்டிருக்கிறது.டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினால் நல்ல மதிப்பு கிடைக்கும். பணம் முக்கியம்தான். கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவராக அறியப்பட வேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.




