
பெண்கள் சுயதொழில் செய்வது வருமானத்திற்கானது மட்டுமல்ல அவர்களுக்கான நம்பிக்கையை விதைப்பதுதான் முக்கிய காரணம். சுற்றத்தார்களுக்கு அவர்கள் மீதான மரியாதையைப் பெருக்கும்.
தற்போதைய காலத்தில் வளர்ந்து வரும் ஆன்லைன் பிஸ்னஸ்தான் களைகட்டுகிறது. இதற்கு பெரிய அளவில் செலவுகள் எதுவும் இல்லை. ஆடைகள், நகைகள், வீட்டு பொருட்கள் இப்படி எதுவாக இருந்தாலும் குறைந்த அளவில் முதலீடு செய்து இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸப்பில் விற்பனை செய்யலாம்.
இன்று யூடியூபர்கள் பெருகிவிட்டதன் காரணம், எளிதில் சம்பாதிக்கலாம் என்பதுதான். மக்களைக் கவரும் வகையில் சிறந்த யோசனைகளை தொகுத்து அதில் ஒன்றை தேர்வு செய்து யூ டியூப் சேனல் துவங்குங்கள். அது மக்களுக்கு பயனுள்ள, தேவைக்கு, தேடுதலுக்கு உதவும் சேனலாக இருந்தால் விரைவில் பிரபலமடையும், சந்தாதாரர்களும் அதிகரிப்பார்கள், வருமானமும் ஈட்டலாம்.