ஜூனியர் செஸ் உலகச் சாம்பியன் பிரக்னாநந்தா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசிபெற்றார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், “இந்த நாள் என் வாழ்வில் மிகச்சிறப்பான நாள்; ரஜினிகாந்த் அங்கிள், எனது குடும்பத்துடன் சில மணி நேரங்களை செலவிட்டார். பெரிய உயரங்களை எட்டியபோது அவரின் தன்னடக்கம் எனக்கு மிகப்பெரும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. மரியாதை, மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.