புதுச்சேரி வில்லியனூரில் தொழிலதிபர்களிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் தொழிலதிபர்களிடம் இருந்து பணம் கொள்ளைபோவது அதிகரித்துள்ளது. அதனால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது புதுச்சேரி வில்லியனூர் தொழிலதிபரிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க போவதாக 10 பேர் கொண்ட குழு திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது.
அதுகுறித்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை பின் தொடர்ந்தும், மறைவான இடத்தில் பதுங்கி இருந்தும் அந்த 10 பேரையும் கைது செய்தனர். கொள்ளை போகாமலும் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் கைது செய்யப்பட்ட 10 பேரிடமிருந்து மிளகாய் பொடி, மூன்று கைதிகள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த 10 பேரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.