சேலம் அருகே மந்திரவாதி சீரழித்த 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழிலதிபர் மீது பெற்றோர் புகார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியின் 15 வயது, 12 வயதுடைய மகள்கள் உடல் நலம் சரியில்லாததால் மந்திரித்து கயிறு கட்ட நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் பகுதியை சேர்ந்த மந்திரவாதியான சேகர் வீட்டுக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அந்த மந்திரவாதி, சிறுமிகளுக்கு பேய் பிடித்திருக்கிறது, அதனை ஓட்ட வேண்டும் என்று கூறி தனது வீட்டில் தங்க வைத்துக்கொண்டார். பின்னர் 2 சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி பெற்றோர் திரும்பி வந்தபோது சிறுமிகள் தெரிவித்ததையடுத்து மங்களபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து போலி மந்திரவாதி சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், அந்த 2 சிறுமிகளையும் சேலம் அருகே சுக்கம்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் ஏற்கனவே பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர் நேற்று வீராணம் போலீசில் புகார் அளித்தனர். அதில், ‘‘வாழப்பாடியில் இருந்த எங்களை சேலம் சுக்கம்பட்டியில் மாட்டுத் தீவனம் தொழில் செய்து வரும் ரவீந்திரன் என்பவர் வேலைக்காக அழைத்து வந்தார். மாதம் ₹15 ஆயிரம் தருவதாக கூறினார். எங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க உதவுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து நாங்கள் இங்கு குடும்பத்துடன் வந்தோம்.
மேலும் எங்களது 2வது மகளை பலமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து அம்மாப்பேட்டை மகளிர் போலீசார் பெற்றோரை அழைத்துக்கொண்டு சுக்கம்பட்டி சென்றனர். அதற்குள் ரவீந்திரன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.




