கள்ளக்குறிச்சி அருகே ஜாபர்அலி என்பவர் வீட்டில் 22 சவரன் நகை கொள்ளை.
கடலூரில் சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தை சேர்ந்தவர் ஜாபிர் அலி. இவர் தன் வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது அவரின் வீடு பூட்டை உடைத்து வீற்றிக்குள் புகுந்த திருடர்கள் அங்கு இருந்த பீரோவை உடைத்துள்ளனர். அந்த பீரோவில் 22 சவரன் நகை இருந்துள்ளது.
அதனை திருடிக்கொண்டு அங்கு இருந்து தப்பி ஓடியுள்ளார் திருடர்கள். உறவினர் வீட்டில் இருந்து திரும்பி வந்த ஜாபர்அலி தன் உடைந்து இருந்த கதவு மற்றும் பீரோவை பார்த்து அதிர்ச்சிக்குள்ளானார். பின்னர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்துள்ளார்.
அதன் பின்னர் சமத்துவ இடத்திற்கு சென்ற சங்கராபுரம் போலீசார் கை ரேகை சோதனைகள் செய்து வருகின்றனர். மேலும் சந்தேகத்திற்குரிய நபர்களை விசாரித்தும் வருகின்றார்கள்.