புதுச்சேரி அடுத்த சத்தமங்கலத்தில் 5 சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலத்தகாரமும், கற்பழிப்பும் ஒழிவதாக இல்லை. நாளுக்கு நாள் காம கொடூரர்கள் முளைத்துக்கொண்டு தான் இருக்கின்றனர். வயதிற்கு வந்தவர்கள், வயதானவர்கள், பால் மனம் மாறாத சிறுமிகள் என்று பாரபட்சம் பார்க்காமல் துன்புறுத்துகின்றனர். தண்டனைகள் கடுமையாக பட்டால்தான் குற்றங்கள் குறையும் என்பது தான் உண்மைபோலும்.
இந்நிலையில் கன்னியப்பன் என்பவரது வாத்துப் பண்னையில் 6 முதல் 14 வயது வரை உள்ள 5 சிறுமிகள் பணிபுரிகின்றனர். இவர்கள் அந்த பணியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கு கொத்தடிமைகள் போல் இருந்து வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு அங்கு போதுமான பாதுகாப்பும் இல்லை.
இந்த நிலையில் அந்த ஐந்து சிறுமிகளும் நேற்று ஆறு பேர் கொண்ட குழுவால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த ஆறு பேரை கைது செய்தனர்.