இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த சாத்தியமில்லை என உச்ச நீதி மன்றம் அதிரடி.

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு தொடுத்தனர். பின்னர் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.
மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. ஆயினும் இந்த குழுவின் பரிந்துரைகளை அடுத்த ஆண்டிலிருந்து அமலுக்கு கொண்டு வரப்படும் என உச்சநீதி மதன்ராம் கூறியது.
ஆனாலும் அதிமுக அரசு இந்த கொள்கைகளை இந்த ஆண்டே நடைமுறை படுத்தவேண்டும் என குறி வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை உச்ச நீதி மன்றத்தை சார்ந்த எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. மனுக்கள் கடந்த 13-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்றும், மத்திய அரசு மருத்துவ கல்லூரிகளில் இருப்பதை போல 27 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அளிக்க முடியுமா? என்பது குறித்தும் மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு இருந்தனர்.
இதனை தொடர்ந்து உச்ச நீதி மன்றம் அளித்த உத்தரவில் இந்த மேற்கொண்ட கொள்கைகளை நடப்பு ஆண்டில் அமல் படுத்துவது சாத்தியமன்று என குறிப்பிட்டது. அதாவது இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த சாத்தியமில்லை என உச்ச நீதி மன்றம் கூறியது.




