குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர்.

கொரோன காரணமாக வாகனங்கள் அதிகளவில் இயங்காத நிலையில் சாலை விபத்துகளும் குறைவாக இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்விக்கப்பட்டு அனைவரும் எப்போதும்போல வாகனங்களை இயக்க சாலை விபத்து முன்பு போலவே நடைபெற்று வருகிறது. குஜராத மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் பத்டி என்னும் பகுதியில் அமைந்துள்ள சாலையில் இன்று லாரியும், ஒரு காரும் மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் லாரி வேகமாக வந்ததால் மோதிய வேகத்தில் கார் தூக்கி வீசப்பட்டு கடுமையாக சேதமடைந்தது. மேலும் காரில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்திலிருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சமத்துவ இடத்திற்கு சென்ற போலீசார் லாரியையும் காரையும் அப்புறப்படுத்தி அதில் இறந்து கிடந்த ஏழுபேரின் சடலத்தை மீட்டனர்.
மேலும் லாரியை ஓட்டிவந்த வாகன ஓட்டிக்கு சில காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தரப்பட்ட வருகின்றது. அதை தொடர்ந்து வாகனத்தை கட்டுப்பாடு இன்றி ஓட்டிய குற்றத்திற்காக அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




