ஓய்வு பெற்ற அரசு அலுவலரிடம் ரூ70 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் ஓய்வு பெற்ற அரசு அலுவலகர். இவர் நேற்று மின் தினம் தன் குடும்ப செலவிற்கு வேண்டி ரூ. 70 ஆயிரத்தை மப்பேடு இந்தியன் வங்கியிலிருந்து எடுத்துக்கொண்டு மோட்டர் சைக்கிள் – ல் வீடு திரும்பியுள்ளார். இவர் மப்பேடு வங்கியில் இருந்து வீடு திரும்புகையில் இவரை சில மர்ம நபர்கள் பின் தொடர்ந்து உள்ளனர்.
இருளஞ்சேரி குளக்கரை அருகே செல்லும் போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தவர்கள் முதியவரிடம் இருசக்கர வாகனத்தில் பின்பக்கம் காற்று குறைவாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் அந்த பெரியவர் தன் வாகனத்தை நிறுத்தியுள்ளார். தன் வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் காற்று உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த வண்டியில் இருந்து இறங்கி உள்ளார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ரூ. 70 ஆயிரத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஏழுமலை மப்பேடு காவல் நிலையத்தில் கொடுத்தார். புகாரின் பேரில் மப்பேடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் ரூ. 70 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றார்.