பெண்ணாடம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
பெண்ணாடம் :
பெண்ணாடம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஜெனிஃபர் தலைமையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்கள். மருத்துவப்பணியாளர்கள் வேளாங்கண்ணி, ரேணுகா, பன்னாட்டு லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் லயன். மு. ஞானமூர்த்தி, பெண்ணாடம் லயன்ஸ் சங்க தலைவர் லயன். சி. மாரிமுத்து , மு. மாவட்ட தலைவர் தாகொ. சம்பந்தம், செயலாளர் லயன். வி. பாண்டியன் , மு.தலைவர்கள் லயன்.டி. கிருஷ்ணமூர்த்தி, லயன். செல்வராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் 80 நபர்களுக்கு பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் சார்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.