கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பெற்றோருடன் தூங்கிய 3 மாத பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டத்தில் முண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் கோயம்பேடு மாவட்டத்தில் மூட்டை தூக்குகிறார். அவர் மனைவி சந்தியா மற்றும் மூன்று மாத குழந்தை ஆகிய மூவரும் கோயம்பேடு மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் வேலை முடிந்ததும் அங்குள்ள மூன்று சக்கர வாகனத்தில் தூங்குவது வழக்கம். நேற்றும் அதேபோல் மூவரும் தூக்கியுள்ளனர்.
தூங்கி எழுந்து பார்த்தபொது குழந்தை சஞ்சனா காணவில்லை என்பதை கவனித்துள்ளனர். அதனால் பதட்டம் அடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மார்க்கெட் வளாகம் முழுவதும் தேடி உள்ளனர். எவ்வளவு தேடியும் குழந்தை கிடைக்காததால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீசார், சிசிடிவி பதிவு காட்சிகள் எல்லாம் சோதனை செய்து வருகின்றனர். அதில் பதிவாகி உள்ள மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




