ஆஸ்திரேலியா தம்பதி குழந்தைக்கு டாமினிக் என்று பெயர் சூட்டியதால் தனியார் பிட்சா நிறுவனம் 60 ஆண்டுகளுக்கு குழந்தைக்கு பிட்சா இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.
ஆஸ்திரேலியா :
ஆஸ்திரேலியாவில் உள்ள டோமினோஸ் நிறுவனம் அவர்களின் 60 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நோக்கத்தில் ஒரு போட்டியை அறிவித்து இருந்தது. அதாவது டிசம்பர் 9 ஆம் தேதி பிறக்கும் குடும்பத்தின் முதல் குழந்தைக்கு ஆண் குழந்தையாக இருந்தால் டொமினிக் என்றும் பெண் குழந்தையாக இருந்தால் டொமினிக்யூ எனப் பெயரிட்டால் அந்த குழந்தைக்கு 60 ஆண்டுகள் பீட்சா கிடைக்கும் அளவிற்கான பணத்தைப் பரிசாக வழங்குவதாக அவர்கள் அறிவித்திருந்தன. சிட்னியைச் சேர்ந்த தம்பதியினரான சிலிமென்டைன் ஓல்டு பீல்டு மற்றும் ஆண்டனி லாட் என்ற தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையை அன்றைய நாளில் ஈன்றெடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்று உள்ளனர்.டிசம்பர் 9 ஆம் தேதி புதன்கிழமை அன்று சரியாக அதிகாலை 1.47 மணிக்கு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த போட்டியில் பங்கு கொள்ள அவர்கள் தங்கள் மகனுக்கு டோமினிக் என்ற பெயரையும் சூட்டி பிறப்புச் சான்றிதழ் உடன் விண்ணப்பித்து பரிசுத் தொகையையும் தட்டிச் சென்று உள்ளனர். அந்த குழந்தைக்கு 60 ஆண்டுகள் பீட்சா வழங்குவதற்கான பணத்தை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு பீட்சாவின் விலை 14 டாலர் ஆகும். 60 வருடத்திற்கு கிட்டத்தட்ட 10,080 ஆஸ்திரேலியா டாலரை டோமினோஸ் நிறுவனம் அந்த தம்பதியினருக்கு வழங்கியுள்ளது. நம்முடைய இந்திய மதிப்புக்கு கிட்டத்தட்ட 5.63 லட்சம் ரூபாய் ஆகும். பிறக்கும் போதே அவர்களுடைய மகன் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளதாக அந்த தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Read more – உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனரை மிஞ்சிய எலான் மஸ்க்
இந்த நன்னாளில் டோமினிக் பிறந்ததும் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இந்த பரிசுத் தொகையுடன் சிலிமென்டைன் ஓல்டு பீல்டு மற்றும் ஆண்டனி லாட் தம்பதியினருக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என கூறியுள்ளனர். பீட்சா உலகில் எங்கள் சேவை இன்னும் தொடரும் என டோமினோஸ் நிறுவனம் பறைசாற்றியுள்ளது.