மகளுக்காக மொட்டையடித்து கொண்ட தாய் செயலின் வைரல் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அவரது தாய் தானும் மொட்டையடித்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. நெட்டிசன்ஸ் வீடியோவை கண்டு நெகிழ்ச்சியுடன் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதயத்தை நெகிழ செய்யும் வீடியோவாக இந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவில் புற்றுநோயை எதிர்த்து போராடும் தனது மகளின் ஆறுதலுக்காக அவரது தாயும் தனது முடியை மொட்டை அடித்து உள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தாய் முடி வெட்டும் கருவியை கொண்டு தனது மகளுக்கு முடியை வெட்டுகிறார். இந்த செயல்ப்பாட்டின் நடுவே அவர் தனது முடியையும் வெட்டிக்கொண்டு பார்ப்பவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அந்த பெண்ணும் தனது தாயின் செய்கையை கண்டு அதிர்ச்சியடைகிறார். “யாரும் தனியாக வாழ்க்கையில் போராடுவதில்லை.ஒற்றுமையுடன் தனது முடியையும் மொட்டையடித்து தனது மகளை அந்த தாய் ஆச்சர்யப்படுத்தினார். ஒரு தாயின் அன்பை விட வலிமையானது எதுவுமில்லை” என்று குட்நியூஸ்கோர்ஸ் எனும் டிவிட்டர் கணக்கு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது
இந்த இருவரும் முழுவதுமாக முடியை வெட்டுவதுடன் இந்த வீடியோ முடிகிறது. ஆன்லைனில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் பார்த்துள்ளனர். பலரும் தனது மகளை ஆதரிப்பதற்காக அந்த தாய் செய்த சக்தி வாய்ந்த செய்கையை பாராட்டுகின்றனர். இந்த வீடியோ தற்சமயம் மிகவும் வைரலாகி வருகிறது.