Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் வழக்கு

December 11, 2021

‘மாநாடு’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்ற அறிவிப்பு வெளியான நாள் முதல் சிலம்பரசன் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். ஆனால், சில பல காரணங்களால் படத்தை 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த முறை தவறக்கூடாது என்று எல்லா வேலைகளையும் பார்த்து பார்த்து கவனித்து வந்த படக்குழு, கோலாகலமாக இசை வெளியீட்டு விழாவை நடத்தியது. சிம்புவும் சென்னை, ஹைதராபாத் என பட ப்ரொமோஷனில் கலந்துகொண்டார். ஆன்லைன் டிக்கெட் புக்கிங்குகள் சரசரவென முழுமையானத் தொடர்ந்து, காலை 5 மணி ஷோவுக்கு ரசிகர்கள் தயாராகினர். இந்த நிலையில் நேற்று மாலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் இருந்து ‘நாளை படம் வெளியாகவில்லை’ என்று வந்த ட்வீட் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சிம்புவின் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

காரணம், படத்திற்கு பைனான்ஸ் செய்த உத்தம் சந்த் என்பவர்தான். இவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு பைனான்ஸ் செய்திருக்கிறார். அந்தப் பணத்தை படம் வெளியீட்டுக்கு முன் திரும்பத் தருவதாக, சுரேஷ் காமாட்சி சொல்லியிருந்திருக்கிறார். ஆனால், அவரால் அந்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், படத்தை வெளியாக சிக்கல் ஏற்பட்டது.

யாருக்கும் தெரியாமல் மதுரை சென்ற புஸ்ஸி ஆனந்த்

உங்கள் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?

கொரோனா குமாருக்கு ஜோடியாகும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி?!

படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமம் 11 கோடிக்கு வாங்கப்பட்டிருப்பதால் குறித்த தேதியில் படம் வெளியாகாவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கவலைப்பட்டனர். பல முன்னணி தயாரிப்பாளர்கள் முன்னணியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சோனி நிறுவனம் 10.5 கோடிக்கு படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை வாங்கிக்கொள்வதாகக் கூறியிருந்தது. அதன் பேரில் பைனான்சியர் அன்புச்செழியன் 10 கோடி ரூபாய் கடனாக கொடுத்து உதவியிருக்கிறார். சிம்பு படம் பிரச்னை இல்லாமல் வெளியாக வேண்டும் என்பதற்காக, அவர் தற்போது நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் ‘என் மகன் படம் வெளியாகாமல் இருப்பது கெளரவ பிரச்னை’ என்று 3 கோடி ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டார். படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவிக்கு வாங்கி அதன் மூலம் 6 கோடி ரூபாய் பணம் கொடுப்பதகா சொல்லியிருந்தனர், உதயநிதி ஸ்டாலின் தரப்பு. இதனால், கடன் அடைந்து படம் வெளியாவது முதலில் உறுதி செய்யப்பட்டது.

அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் படத்தை வரும் பொங்கலுக்கு கலைஞர் டிவியில் ஒளிப்பரப்ப இருக்கிறோம் என்று கூறியிருக்கின்றனர். ஆனால், ‘மாநாடு’ படக்குழுவோ, படம் வெளியாகி மூன்று மாதம் கழித்துதான் டிவியில் ஒளிப்பர வேண்டும் என்று சோனி நிறுவனத்திடம் ஒப்பந்தமிட்டிருக்கிறது. அதனால், படத்தை கலைஞர் டிவி தரப்பு வாங்கவில்லை. இப்போது அவர்கள் கொடுப்பதாக இருந்த 6 கோடி துண்டு விழுந்தது. அதனால்தான், காலை 5 மணி ஷோ ரத்தானது. விடிய விடிய நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் விடுப்பட்ட 6 கோடியை டி.ராஜேந்தர் தருவதாக வாக்குறுதி அளித்த பின்பே, படம் 8 மணிக்கு வெளியானது. இதைத்தொடர்ந்து ஒருவழியாக விஜய்டிவி “மாநாடு ” படத்தின் சாட்டிலைட் உரிமையை 8 கோடிக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக நடிகர் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பைனான்சியர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது படத்தை வெளியிட பெருமுயற்சி எடுத்த எங்களை கலந்தாலோசிக்காமல் சேட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளதாக டி ராஜேந்தர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கங்கை நதியில் கரைக்கப்பட்டது உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் அஸ்தி!

Next Post

இன்று முதல் பரிசோதனை…பொது இடங்களுக்கு செல்பவர்கள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்!

Next Post

இன்று முதல் பரிசோதனை…பொது இடங்களுக்கு செல்பவர்கள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version