நடிகை குஷ்பு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்.
சமீப காலமாகவே காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு அக்கட்சியிலிருந்து விலகி, பஜகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால் அது வதந்திகள் என்றும் பாஜவினர்தான் இந்த வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக குஷ்பு குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தன் கட்சித் தொண்ர்கள் 140க்கும் மேற்பட்டவர்களும் அவர் சென்னை முக்கிய சாலையில் போராட்டம் நடத்தினார். அவர் உள்ளிட்ட அக்கட்சினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று குஷ்பு டெல்லி சென்று பாஜக தலைவர் நட்டாவைச் சந்தித்து அக்கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் தற்போது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளார்.இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குஷ்பு இந்த முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.