விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர்.
இந்த ஜோடிகள் அடிக்கடி வெளிநாடுகள் செல்வதும், சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதும் என தற்போது பிஸியாகவே உள்ளனர்.
இந்த நிலையில், நாட்டுபுறப்பாடகி மதுரமல்லி என்பவரால் இயற்றி பாடப்பட்டு, யூடியூப்பில் 2 கோடி முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்ட கிராமியப் பாடலைத் திருடி,
கோவில் விழாக்களில் பாடிய சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி தம்பதி, அந்த பாடலை தங்கள் தோழி இயற்றியதாகக் கூறி பொய்யான பரப்புரையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், நாட்டுபுற கவிஞர் செல்லதங்கையா என்பவரின் பாடல்வரிகளுக்கு இவர்கள் பாடி பிரபலமான சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் – ராஜலெட்சுமி தம்பதி மீது தான் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விவரமாக, மதுரமல்லி என்ற புனைப் பெயரில் பாடல்களை இயற்றி பாடிவரும் டாக்டர் கலைச்செல்வியின் மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது என்ற,
வீடியோ பாடல் ஆனது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலெட்சுமியின் கிராமிய பாடல்களை மிஞ்சும் அளவிற்கு யூடியூப்பில் 2 கோடி முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்டு ஹிட் அடித்தது.
இதனிடையே, அண்மையில் நடந்த கோவில் விழா மேடைக்கச்சேரி ஒன்றில்,
மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது என்ற பாடலை தனது தங்கை கலைவாணி என்பவர் இயற்றி பாடியதாக ராஜலெட்சுமி பேசியது தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
மேலும், அந்த பாடலை இயற்றி பாடியதற்கு ஆதரமாக யூடியூப்பில் இன்றளவும் அந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், ராஜலட்சுமி யாரோ ஒரு
பெண்ணை வைத்து அந்த பாடலுக்கு சொந்தம் கொண்டாடுவது கீழ்த்தரமானது என்று கண்டனம் தெரிவித்தார் கிராமியப் பாடகி மதுர மல்லி.
இதையடுத்து, செந்தில் – ராஜலட்சுமி தவறான கருத்தை வாபஸ் பெறவில்லையென்றால் த ற்கொ லை செய்து கொள்வேன் என்கிற அளவுக்கு பாடகி மதுர மல்லி கடுமையானமன உ ளைச்சலுடன் வீடியோ வெளியிடும் நிலைக்கு த ள் ளப்பட்டு ள்ளார்.
இதனால், நாட்டுப்புற பாடகர் தம்பதியரான செந்தில் ராஜலெட்சுமி ஆகியோர் பாடலை சுட்டதற்கு ம ன்னி ப்பு கேட்பார்கள், நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காவல்துறையில் புகார் அளித்து விட்டு க ண் ணீர் ம ல் க காத்திருக்கிறார் கிராமிய பாடகி மதுர மல்லி.