யாருய்யா இந்த மனுஷன்..இப்படி நடிக்கிறாரே என்று ஒட்டுமொத்த மக்களையும் எட்டிப் பார்க்க வாய்த்த எம்.எஸ் பாஸ்கர் அவர்களின் பயணத்தில் கிடைத்த சில முத்துக்கள் உங்களுக்காக
மொழி:
‘பாபு, ஒரு செருப்பு வாங்கிக்குடேன்!” இந்த வசனத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. அப்பாவித்தனம் மிக்க பேராசிரியராக அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் எம்.எஸ்.பாஸ்கர்.
மனதால் இன்னும் நிகழ்காலத்திற்கு வரவில்லை என்றாலும், அப்படிப்பட்ட கதாபாத்திரத்திலும் நகைச்சுவை மிக அழகாய் மிளிர்கிறது இவரது நடிப்பில். சாதாரண வசனங்களிலும் தன் பேசும் திறனால் சிரிப்பு வரவைத்தவர்
தன் மகனுடன் பேசுவது போல் இவர் நடிக்கும் காட்சிகளில், நம் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. கத்தாமல், அழாமல் கூட பார்வையாளர்களை நெகிழ வைக்க முடியும் என்று நிரூபித்த மேதை.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!
குணச்சித்திர கதாபாத்திரங்களில் எந்த அளவு நம்மை தன்வசப்படுத்துவாரோ அதே அளவு, நகைச்சுவையிலும் பிரமாதமாக வெளிப்படுபவர். குறிப்பாக வித விதமான தமிழில் அவர் பேசுவது தனி அழகு

சென்னைத் தமிழ் முதல் செந்தமிழ் வரை ரகம் ரகமாய் நடித்து நம்மை மிரள வைப்பவர். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் மலையாளம் கலந்த தமிழில் பேசி தன் பணியாளர்களை திட்டுவது சூப்பர். குறிப்பாக பெண் பணியாளர் வரும்போது மட்டும், பின்னணி இசை வந்து அதற்கு ஏற்றாற்போல் இவர் முக பாவங்கள் காட்டுவது கலக்கல்
இவரது பிற காமெடி பாத்திரங்கள்:
விந்தை – சுத்த தமிழில் கலக்கியிருப்பார்
இரும்புக்கோட்டை முரட்டு சங்கம் – புதிய பாஷையே உருவாக்கி சூப்பராக பேசியிருக்கிறார்
அழகிய தீயே – போலீஸ் வேடம் புனைய ஆசை கொண்டு இவர் அடிக்கும் லூட்டிகள் ஏராளம்
உப்பு கருவாடு
நெய்தல் ஜெயராமன் என்ற பாத்திரத்தில் வருகிறார் கவிதையும் கம்பீரமும் கலந்த சூப்பர் ரோல் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களுக்கு

கவிதை சொல்லும்போது மிடுக்கும், ஆங்காங்கே அழகான நகைச்சுவையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பார்
இப்படியும் கோபப்பட முடியுமா என்று சிந்திக்கும் அளவு அந்தப் பாத்திரத்திற்கு ஏற்ற நியாயத்தை கோபமாக வெளிப்படுத்தியிருப்பார்
புத்தம் புது காலை
சமீபத்தில் வெளிவந்த அபாரமான படம். தனக்கே உரிய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் எம்.எஸ்.பாஸ்கர்
காதலால் தன்னை விட்டு விலகிய மகளை எண்ணி அவர் வருத்தப்படும் காட்சி அவர் திறமையின் உச்சம். கண்களில் நீர் மல்க இவர் கூறும் வசனத்தில் ஏதோ அப்படி ஒரு அழகு
இந்த மனுஷனுக்கு என்ன வேணா விருது கொடுக்கலாம் என்றே தோன்றுகிறது
8 தோட்டாக்கள்
திரைப்படத்தை இயக்கிய அறிமுக டைரக்டர் ஸ்ரீ கணேஷ், எம்.எஸ். பாஸ்கருக்கு கிளிசரின் எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைத்தார், அந்த குறிப்பிட்ட காட்சியில் அவர் அழ வேண்டியது அவசியம். ஆனால் பாஸ்கர் அதை மறுத்து, ஒரே நேரத்தில் ஷாட்டுக்கு சென்றார் என்று கூறுகிறார்

அந்தக் காட்சியைப் புகழாதவர்கள் யாருமே இல்லை தமிழ் சினிமா கண்டா அற்புத நடிகர்களில் மறக்க முடியாதவர் எம் எஸ் பாஸ்கர் என்றல் மிகையாகாது




