நடிகர் அமிதாப் பச்சன் இன்று தனது 78 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன். இவர் இன்று தனது 78 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும் திரைநட்சத்திரங்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கடந்த 1942 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் நாள் பிறந்தார்.
1969 ஆம் ஆண்டு வெளியான சாட்ஹிந்துஸ்தானி என்ற படத்தில் முதன் முதலில் திரையில் தோன்றினார். சிறந்த புதுமுக தேசிய விருது கிடைத்தது. 1970 ஆண்டு தனது திரைப்பிரவேசத்தைத் தொடங்கிய அமிதாப் பாலிவுட் உலகில் கோபக் கார இளைஞர் என்று பிரபலமானார். இந்தியா சினிமா அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. ரஜினி உள்ளிட்ட நடிகர்களின் ரோல் மாடலாக விளங்கி வருகிறார்.
அவர் கூலி படத்தின்போது சண்டை காட்சியின் போது வயிற்றில் ஏற்பட்ட மண்ணீரல் முறிவு இப்போதும் அவருக்கு பெரும் வலியை உண்டாக்கியுள்ளது.
இவருக்கு காங்கிரஸ் தொடர்பு இருந்ததன் காரணமாக உபி.,ன் முதல்வரை எதிர்த்து லோக் சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அரசியலில் நீடிக்கவில்லை.
இவர் பிரபல நடிகை ஜெயபாதுரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்., இந்த தமப்தியர்க்க்கு அபிஷேக் பச்சன், ஷ்வேதா நந்தா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.
தற்போதும் நடிப்பில் சிறந்து விளங்கும் அபிதாப் பச்சனுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.




