சாலையில் கிடந்த வெளிமாநில தொழிலாளியின் ஆண்ட்ராய்ட் மொபைல் போனை திருநங்கை ஒருவர் கண்டெடுத்து திருப்பியளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை :
சாலையில் கிடந்த வெளிமாநில தொழிலாளியின் ஆண்ட்ராய்ட் மொபைல் போனை கவிதா என்ற திருநங்கை கண்டெடுத்து நேரில் திருப்பியளித்த சம்பவம் பாராட்டுகளை பெற்றுவருகிறது. இதுகுறித்து கவிதா தெரிவிக்கையில்,
தினமும் நடக்கும் சாலையில் நடந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக கீழே கிடந்த ஆண்ட்ராய்ட் மொபைல் போனை ஒன்றை கண்டெடுத்தோம். அதன் பிறகு அந்த மொபைலை தவறவிட்ட வெளிமாநில ஏழை தொழிலாளி அவர் நண்பர் மூலம் என்னை தொடர்பு கொண்டார்.
Read more – ஒன்றரை வயது குழந்தைக்கு ஓவர் டோஸ்.. பயிற்சி இல்லாத நர்ஸால் ஏற்பட்ட பரிதாபம் ..
அப்பொழுது உடனடியாக எனது விலாசத்தை பெற்று கொண்ட அவர் நேரில் வந்து பெற்றுக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்த தகவல் தெரிந்து பலரும் என்னை பாராட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.




