காவல் நிலையத்தில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய செக்கானூரணி ஆய்வாளர் அனிதா கைது செய்யப்பட்டார்
காவல் நிலையத்தில் ரூ.30000 லஞ்சம் வாங்கிய செக்கானூரணி ஆய்வாளர் அனிதா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் காவல் துறையில் இருந்து நிலத்தகராறு தொடர்பாக வழக்கில் இருந்து 2 பேரை விடுவிக்க வேண்டும். அப்படி செய்தால் அவருக்கு ரூ.2 லட்சம் தரவேண்டும் என்று அனிதா லஞ்சம் கேட்டுள்ளார்.
பின்னர் அதற்கு நல்லதம்பி என்பவர் அனிதாவுக்கு ரூ.80000 தருவதாக ஒப்புக் கொண்டு அதனை தொடர்ந்து முதற்கட்டமாக ரூ.30000 காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.
அவர் கொண்டு வந்த முப்பதாயிரம் ரூபாய் நோட்டுகளில் ரசாயனம் தடவிய நோட்டுக்களை அனிதா வாங்கிய போது இவரை லஞ்ச ஒழிப்பத்துறை பிடித்துள்ளது.